பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக இயற்கை மாற்றுகள் என்னென்ன?

ஒரு காலத்தில் ஆற்றில் குளத்தில் ஓடையில் நிரம்பி வழிந்து நீரை குடித்து வாழ்ந்த நாம் தற்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

முன்பெல்லாம் தண்ணீர் எங்கேயாவது அடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றால் சுரைக்காய் என்று ஒரு காய் இருக்கிறது; அந்த காயை நன்றாக காய வைத்து காய்ந்ததும் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு அதில் தண்ணீரை அடைத்து கொண்டு செல்வார்கள். இதுதான் இயற்கையில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆதி கால நடைமுறை!

யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய இயற்கையான வழிமுறை. ஆனால் அதெல்லாம் தவிர்த்து விட்டு அதன் பிறகு நெகிழி பைகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் வியாபாரம் படிப்படியாக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. இதன் ஆபத்தை உணராமல் மக்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். 

வாழை இலையில் எப்படி சூடான சாப்பாட்டை பரிமாறினால் சாப்பாட்டில் இலையின் சத்துக்கள் வந்து சேரும் என்கிறார்களோ அதே போல பிளாஸ்டிக் தண்ணீர் அடைக்கப்பட்ட தண்ணீர் வெப்பத்தில் உருகி வேதி சேர்மங்கள் தண்ணீரில் கலக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி நெகிழி சேர்மங்கள் பிளாஸ்டிக் வேதிச் சேர்மங்கள்  கலக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தானது. 

தண்ணீரை வெளியே கொண்டு செல்ல பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாகப் பயன்படுத்தக்கூடிய பல இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் உள்ளன.

தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக பயன்படுத்தக்  கூடிய உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்காத மாற்றுகளை இந்த பதிவில் விரிவாக காண்போம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் (Stainless Steel Bottles): 

இவை மிகவும் நீடித்த, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை. இவை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடுவதில்லை, மேலும் தண்ணீரை நீண்ட நேரம் சூடாகவோ அல்லது குளிராகவோ வைத்திருக்க உதவும் வெப்பக்காப்பு (insulated) வகைகளிலும் கிடைக்கின்றன.

கண்ணாடி பாட்டில்கள் (Glass Bottles): 

கண்ணாடி இரசாயனங்களை வெளியிடுவதில்லை, மேலும் தண்ணீரின் சுவையை மாற்றாது. இது மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யக்கூடியது. ஆனால் இது உடையும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க சில கண்ணாடி பாட்டில்களில் பாதுகாப்பு உறைகள் (protective sleeves) வருகின்றன.

செராமிக் பாட்டில்கள் (Ceramic Bottles): 

இவை அழகிய வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. செராமிக் பாட்டில்கள் நீடித்தவை மற்றும் தண்ணீரின் வெப்பநிலையை பராமரிக்க உதவும். இருப்பினும், இவை கண்ணாடியைப் போலவே உடையக்கூடியவை.

மூங்கில் பாட்டில்கள் (Bamboo Water Bottles):

 மூங்கில் ஒரு வேகமாக வளரக்கூடிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய வளமாகும். மூங்கில் பாட்டில்கள் எடை குறைந்தவை, நீடித்தவை மற்றும் மக்கும் தன்மையுடையவை. ஆனால், இவை சரியாக பராமரிக்கப்படாவிட்டால் பூஞ்சை வளர வாய்ப்புள்ளது.

தாமிர பாட்டில்கள் (Copper Bottles): 

தாமிர பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. 
தாமிரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதற்கு சரியான சுத்தம் மற்றும் பராமரிப்பு தேவை.

அலுமினியம் பாட்டில்கள் (Aluminum Bottles):

 அலுமினிய பாட்டில்கள் எடை குறைந்தவை மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை. இருப்பினும், சில அலுமினிய பாட்டில்களுக்கு உட்புறத்தில் ஒரு பூச்சு இருக்கும், அதை கவனிக்க வேண்டும்.
இந்த மாற்றுப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த நான்கு மாற்று வழி மறைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக இந்த தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்த அளவு ஆபத்து வராமல் தடுக்கலாம். நீங்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் போது உங்களுக்கு அதன் மூலம் அதிக அளவு உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் வாட்டர் கேன் நீங்கள் தண்ணீர் குடிப்பதற்கு தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. 

இதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்களுக்கு சூரிய ஒளி பிளாஸ்டிக் பாட்டில் மீது படும்பொழுது பிளாஸ்டிக் பாட்டில் உள்ளே உள்ள நீரில் கிருமிகள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் இதனை தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் அதிகமாக பயன்படுவது மூலமாக அதிகளவு மாசுக்கள் ஏற்படுகிறது. இது மக்காத தன்மை உடையது இதனை நாம் இருக்கும் பொழுது காற்று அதிகளவு மாசடைகிறது. எனவே நாம் முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து நாம் சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்.

0 Comments